சாலை தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்தது; முதியவர் சாவு

சாலை தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்ததில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-04-09 06:45 GMT

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா நந்தரபெட்டு பகுதியை சேர்ந்தவர் சதாசிவ ஆச்சார்யா (வயது 77). இவர் தனது மகன் கணேஷ் ஆச்சார்யா, மருமகன் சுரேஷ் ஆச்சார்யா, பேரன் ஆகாஷ் ஆகியோருடன் புத்தூரில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்று விட்டு திரும்பி காரில் நந்தரபெட்டு நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை ஆகாஷ் ஓட்டினார். இந்த நிலையில் அவர்கள், அஜ்ஜிபெட்டு கிராஸ் பகுதியில் வந்தபோது, திடீரென்று ஆகாசின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சதாசிவ ஆச்சார்யா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மெல்கார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பலியான சதாசிவ ஆச்சார்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மெல்கார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்