"டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்வி உறுதியாகிவிட்டது" - அரவிந்த் கெஜ்ரிவால்

தோற்கும் கட்சிக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள் என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Update: 2022-10-13 13:44 GMT

டெல்லி,

டெல்லியில் இந்த ஆண்டு இறுதியில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலை சந்திக்க பா.ஜ.க., ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.

இதனிடையே டெல்லி மாநகராட்சி நிர்வாக சட்டம் 1957-ல் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், இதன் மூலம் டெல்லி துணை நிலை கவர்னருக்கு மாநகராட்சி நிர்வாகத்தில் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகின. இதன் மூலம் மாநகராட்சி நிர்வாகத்தில் மத்திய பா.ஜ.க. அரசின் தலையீடு குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பா.ஜ.க. தோல்வியடைவது உறுதியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தோற்கும் கட்சிக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லியை தூய்மையான, அழகான நகரமாக ஆம் ஆத்மி அரசு மாற்றும் என்று கூறியுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்