இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட 2-வது கணவர் கைது

இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-11-26 00:19 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் ஆபாச படங்கள் சமூக வலைதளத்திலும் பதிவிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த பெண்ணின் உறவினர்களுக்கும் சமூகவலைளத்தில் அனுப்பப்பட்டு இருந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த இந்த இளம்பெண், புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், ஆபாச படத்தை பதிவிட்டவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை புதுவைக்கு அழைத்துவந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த பாண்டியன் என்பதும், இளம்பெண்ணின் 2-வது கணவர் என்பது தெரியவந்தது. பாண்டியனுடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என மிரட்டி அவரின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து பாண்டியனை போலீசார் கைது செய்து புதுவை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்