மன்மோகன் சிங் மறைவு: கர்நாடகாவில் இன்று பொது விடுமுறை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார்.

Update: 2024-12-27 02:09 GMT

பெங்களூரு,

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மன்மோகன் சிங் மறைவையொட்டி கர்நாடகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று கர்நாடகத்தில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இன்று முதல் 7 நாட்கள் கர்நாடகத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது மேலும் காங்கிரஸ் அலுவலகங்களிலும் அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்