மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை- கார்த்தி சிதம்பரம்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்திறன் குறித்து மற்றவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை அவர்கள்தான் சொல்ல வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.;

Update:2024-11-25 15:40 IST

புதுடெல்லி:

மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வி அடைந்தது. வாக்குப் பதிவு எந்திர மோசடிகளே தோல்விக்கு காரணம் என அந்த கூட்டணியின் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த கருத்துக்கு நேர்மாறாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

நான் 2004-ம் ஆண்டு முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் தேர்தல்களில் பங்கேற்று வருகிறேன். இந்த விஷயத்தில், தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த மோசமான அனுபவமும் இல்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு அல்லது தில்லுமுல்லு நடந்துள்ளதா? என்பதை நிரூபிக்க என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்திறன் குறித்து மற்றவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை அவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்திறன் குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை.

முறைகேடு புகார் தொடர்பாக அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லையென்றால் இந்த விஷயத்தில் எனது நிலைப்பாட்டை மாற்றமாட்டேன். எங்கள் கட்சியிலும் பலருக்கு வெவ்வேறு கண்ணோட்டம் உள்ளது என்பதை அறிவேன். இதுபற்றி அவர்கள் விளக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்