சர்வதேச விமான நிலையத்தால் கோவா வளர்ச்சி அடையும் - பிரதமர் மோடி

கடந்த எட்டு ஆண்டுகளில் சுற்றுலாப்பயணிகளின் பயணத்தை எளிமைப்படுத்த இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

Update: 2022-12-11 14:47 GMT

கோவா,

கோவாவின் டபோலிம் விமான நிலையமானது 1 ஆண்டில் 85 லட்சம் பயணிகளை கையாளும் திறனுடையது ஆகும். இந்த நிலையில் கோவாவின் மோபாவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மோபா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

ரூபாய். 2 870 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த விமான நிலையத்தில் இரவில் விமானம் நிறுத்தும் வசதி, சரக்கு முனையம் போன்றவை புதிதாக அமைகிறது. முதற் கட்டமாக ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன்கொண்ட இந்த விமான நிலையமானது, முழு திட்டமும் நிறைவடைந்த பிறகு ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை கையாளும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், உலகின் மூன்றாவது பெரிய விமான உலக சந்தையாக இந்தியா மாறி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

கோவா மாநிலம் மோபாவில் மனோகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:

கோவாவின் மோபாவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு மறைந்த மனோகர் பாரிக்கர் பெயர் சூட்டப்பட்டத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசின் உள்கட்டமைப்புகளை உருவாக்கும் அணுகுமுறை மாறி விட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையமே இதற்கு சிறந்த உதாரணம். கடந்த எட்டு ஆண்டுகளில் சுற்றுலாப்பயணிகளின் பயணத்தை எளிமைப்படுத்த இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

விசா ஆன் அரைவல் வசதிகளை அதிகரித்து விசா நடைமுறையை எளிமைப்படுத்தி உள்ளோம். மேலும் நாட்டின் சிறிய நகரங்களுக்கு விமானப்பயணத்தை மேற்கொள்வதற்கு முன்முயற்சி எடுத்துள்ளோம். இதற்காக நாடு முழுவதும் விமான நிலைய வலை அமைப்பை விரிவு படுத்தி உள்ளோம். தற்போது வரையில் சுமார் 72 விமான நிலையங்கள் கட்டப்பட்டு உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்