தலைமறைவான கைதி 4 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான கைதி 4 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

Update: 2023-03-07 04:30 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா(மாவட்டம்) டவுன் வினோபா நகர் டி.வி.ஜி.பார் பகுதியில் வசித்து வந்தவர் சந்துரு(வயது 31). இவரது சொந்த ஊர் துமகூரு மாவட்ட சிரா தாலுகா கடபுரகெரே கிராமம் ஆகும். இவர் சிவமொக்காவில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் மீது துங்கா நகர் போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் கடந்த 2018-ம் ஆண்டு இவர் ஒரு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார். கடந்த 2018-ம் ஆண்டு முதல் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை துங்கா நகர் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் சந்துரு, ஹாவேரி மாவட்டம் பேடகி தாலுகா பெட்டத மல்லேஸ்வரா கிராமத்தில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஹாவேரிக்கு சென்று சந்துருவை கைது செய்தனர். பின்னர் அவரை சிவமொக்காவுக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது சந்துரு கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்