68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிப்பு

டெல்லியில், 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது.;

Update:2022-07-22 07:32 IST

டெல்லி,

இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது.

குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கியும் வருகிறது. இதில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தேசிய விருதில், நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றி மாறன், இசை அமைப்பாளர் டி.இமான், நடிகர் பார்த்திபன், குழந்தை நட்சத்திரம் நாகவிஷால் ஆகியோருக்கு தேசிய விருதுகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் சிறந்த திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரம் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்