டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தற்காலிக பந்தல் இடிந்து விழுந்து விபத்து: 8 பேர் காயம்

இந்த விபத்தில் சுமார் 10-12 பேர் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.;

Update:2024-02-17 13:11 IST

புதுடெல்லி,

டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் கேட் நம்பர் 2 அருகே திருமண விழாவிற்காக தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தற்காலிக பந்தல் இன்று காலை 11 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள எய்ம்ஸ் ட்ராமா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் மேலும் 10-12 பேர் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து இவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்