தெலுங்கானா: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

குடியிருப்பு கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Update: 2024-02-28 16:13 GMT

ஐதராபாத்,

தெலங்கானா மாநிலம் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம், குத்புல்லாபூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்