காதலியை ஆபாசமாக புகைப்படம் எடுத்த வாலிபர்: பணம் கேட்டு மிரட்டல்

பணம் தரவில்லை என்றால் ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.;

Update:2024-07-21 07:39 IST

வயநாடு,

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் கைதப்பொயில் பகுதியை சேர்ந்தவர் ஆஷிக் (வயது 29). இவருக்கும், வயநாட்டை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஆஷிக் இளம்பெண்ணை தனது செல்போனில் ஆபாசமாக புகைப்படம் எடுத்து உள்ளார்.

கடந்த மாதம் 22-ந் தேதி அந்த புகைப்படத்தை இளம்பெண்ணின் பெற்றோர், உறவினருக்கு வாட்ஸ்-அப் செயலி மூலம் அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டு உள்ளார். பணம் தராவிட்டால் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டினார். இதுகுறித்து மேப்பாடி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதை அறிந்த ஆஷிக் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லூக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் ஆஷிக் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்