டிராக்டர்-மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
நவலகுந்து அருகே டிராக்டர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியாகினார்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா குடிசார் கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் பட்டீத் (வயது 31). இவர் நவலகுந்து டவுன் பகுதியில் வேலையை முடித்துவிட்டு, குடிசார் கிராமத்தை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சாலையின் முன்னால் சென்ற டிராக்டர் மீது அவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து நவலகுந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.