தார்வார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தற்கொலை

தார்வார்டு கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-22 18:45 GMT

உப்பள்ளி:

தார்வார் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுச்சுவரை ஒட்டி உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் தார்வார் உபநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தூக்கில் பிணமாக கிடந்தவர் தார்வார் ஜன்னத் நகரை சேர்ந்த தவ்கீத் (வயது 24) என்பதும், அவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. அவருடைய தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தார்வார் உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்