கர்நாடகத்தில் தொடக்க பள்ளிகளுக்கு 2,500 ஆசிரியர்கள் நியமனம்
கர்நாடகத்தில் விரைவில் தொடக்க பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் அரசின் தொடக்க பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி இடங்கள் காலியாக உள்ளன. தொடக்க பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறையும் இருக்கிறது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தொடக்க பள்ளிகளுக்கு புதிதாக 2,500 ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. 2,200 ஆசிரியர்கள், 200 உடற்கல்வி ஆசிரியர்கள், 100 சிறப்பு ஆசிரியர்கள் என மொத்தம் 2,500 பேர் நியமிக்கப்பட உள்ளனர். கூடிய விரைவில் இதற்கான அரசாணை வெளியாக இருக்கிறது. இதுதவிர மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.