பிரதமர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் தமிழக அமைச்சர் பங்கேற்பு
பேரிடர் அபாயங்களை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான 3-வது தேசிய அளவிலான ஆய்வு கூட்டம் டெல்லி விஞ்ஞான பவனில் நேற்று நடைபெற்றது.
புதுடெல்லி,
பேரிடர் அபாயங்களை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான 3-வது தேசிய அளவிலான ஆய்வு கூட்டம் டெல்லி விஞ்ஞான பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
இதில் தமிழ்நாடு அரசு சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் எஸ்.ஏ.ராமன், தஞ்சாவூர், நெல்லை, தூத்துக்குடி, திருச்சி மாநகரங்களின் மேயர்கள், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களின் கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.