சிவசேனா கட்சி விவகாரம்: உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை ஏக்னாத் ஷிண்டே தரப்புக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கு நாளை விசாரிக்கப்படுகிறது.
புதுடெல்லி,
மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தனர். இந்த நிலையில் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று முதல்-மந்திரி ஷிண்டே மற்றும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆகிய இரு தரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம் ஷிண்டே தரப்பினர் தான் உண்மையான சிவசேனா என்று கடந்த வெள்ளிக்கிழமை முடிவை அறிவித்தது. சிவசேனா கட்சி பெயர், சின்னம் ஆகிவற்றை ஷிண்டே தரப்பிடம் ஒப்படைத்தது. எம்.எல்.ஏ.க்கள் பலத்தை அடிப்படையாக வைத்து இந்த முடிவை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு குறித்து உத்தவ் தாக்கரே கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பினர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டிடம் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டைச் சந்தித்து, சிவ சேனா தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுகோள் விடுத்தார். மேலும், தேர்தல் ஆணையத்தின் முடிவை அடுத்து, கட்சியின் சொத்துக்களை கைப்பற்றும் முயற்சி நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை மாலை 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி இதை ஏற்கவில்லை. உத்தவ் தரப்பு மனு குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் சிவ சேனா தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுகோள் விடுத்தார். மேலும், தேர்தல் ஆணையத்தின் முடிவை அடுத்து, கட்சியின் சொத்துக்களை கைப்பற்றும் முயற்சி நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை மாலை 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.