மதமாற்றம் செய்வதற்கு எதிரான மனு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாய் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.;

Update:2022-09-23 23:28 IST

புதுடெல்லி, செப்.24-

பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாய் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், தஞ்சை லாவண்யா தற்கொலைக்கான மூலகாரணத்தை கண்டறிய தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.), சி.பி.ஐ. அல்லது தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்கவேண்டும். இதுபோன்ற மத மாற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும். மதமாற்றத்தை தடுக்கவேண்டிய நடவடிக்கைகளை அறிக்கையாகவும், சட்ட முன்வடிவாகவும் தயார்செய்ய சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், அது தொடர்பாக பதில் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்