சத்யேந்திர ஜெயினுக்கு 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்

டெல்லி முன்னாள் மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு மருத்துவ காரணங்களுக்காக 6 வாரங்கள் இடைக்கால ஜாமீனை சுப்ரீம் கோர்ட் வழங்கியது.

Update: 2023-05-26 06:20 GMT

புதுடெல்லி,

நிதி மோசடி மற்றும் ஹவாலா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி முன்னாள் சுகாதாரத்தூறை மந்திரி சத்யேந்திர ஜெயின் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன் தினம் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயம் அடைந்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சத்யேந்திர ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்