கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கோட் அணிய விலக்கு கோரி மனு - தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு

கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கோட் அணிய விலக்கு அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2024-09-17 11:26 GMT

புதுடெல்லி,

கோடை காலங்களில் வழக்கறிஞர்கள் கருப்பு நிற கோட் மற்றும் அங்கி அணிந்து கோர்ட்டுக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "வழக்கறிஞர்கள் கண்ணியமான உடையை அணிய வேண்டியது அவசியமாகிறது. நீங்கள் குர்த்தா, பைஜாமா அல்லது ஷார்ட்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து கொண்டு கோர்ட்டில் வாதாட முடியாது" என்று குறிப்பிட்டனர்.

மேலும் ராஜஸ்தானில் உள்ள தட்பவெப்ப நிலை பெங்களூருவில் இருப்பதில்லை என்பதால், அந்தந்த பார் கவுன்சில்கள் இது குறித்து முடிவெடுக்கட்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். அதோடு, வழக்கறிஞர்களின் உடை குறித்த விதிகளில் திருத்தங்கள் செய்வது தொடர்பாக பார் கவுன்சில் மற்றும் அரசாங்கத்திடம் மனுதாரர் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 


Tags:    

மேலும் செய்திகள்