சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி அமெரிக்காவில் கைது எனத்தகவல்
சித்து மூஸ்வாலாவின் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த கோல்டி பிரார் பொறுப்பேற்றுக் கொண்டு இருந்தார்.;
வாஷிங்டன்,
பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனடாவை சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்பு போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சித்து மூஸ்வாலாவின் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த கோல்டி பிரார் பொறுப்பேற்றுக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தான் கோல்டி பிராரை கைது செய்வோருக்கு இந்திய அரசு இரண்டு கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்க வேண்டும் என சித்துவின் தந்தை வேண்டுகோள் விடுத்து இருந்தார். அரசால் சன்மான தொகையை செலுத்த முடியவில்லை என்றால், அதனை தாமே செலுத்துவதாகவும் உறுதி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.