பழ ஜூசில் சிறுநீர் கலந்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்த கடைக்காரர் - அதிர்ச்சி சம்பவம்

பழ ஜூசில் சிறுநீர் கலந்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-09-14 09:55 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் லோனி பகுதியில் அமீர் கான் என்பவர் பழ ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பழஜூஸ் கொடுக்கும்போது அதில் மஞ்சள் நிறத்தில் இருந்த தண்ணீர் போன்ற திரவத்தை ஊற்றுவதை சிலர் கவனித்தனர். அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். மேலும் அந்த திரவம் சிறுநீர் என தெரியவந்ததையடுத்து அமீர் கானின் கடையை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். மேலும், அமீர் கானை கடுமையாக தாக்கினர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், பழ ஜூஸ் கடைக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கடைக்குள் பிளாஸ்டிக் கேனில் மனித சிறுநீர் சேமித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு சிறுநீர் கலந்த பழ ஜூசை விற்பனை செய்த கடை உரிமையாளர் அமீர் கானை கைது செய்தனர். அந்த கடையில் வேலை பார்த்த சிறுவனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுநீர் கலந்த பழ ஜூஸ் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்