பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்சோவில் கைது

கொப்பா அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

Update: 2022-10-29 18:45 GMT

சிக்கமகளூரு;

அரசு பள்ளி ஆசிரியர்

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா முத்தினகொப்பா பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 40) என்பவர் ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவர் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவிகள் மற்ற பள்ளி நிர்வாகத்திடம் கூறவில்லை என தெரிகிறது. ஆனால் அவர் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவிகள் இதுகுறித்து கொப்பா போலீசில் புகார் அளித்தனர்.

போக்சோவில் கைது

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சதீசை போக்சோவில் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ெகாண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து கல்வித்துறை அதிகாரி சரண் சந்திரா பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதற்கு முன்பு இதே போல் ஒரு பள்ளியையே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் காரணமாக மூட வைத்த ஆசிரியர் சதீஷ். அவர் மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணி இடைநீக்கம்

இதுபோன்ற ஆசிரியர்களால் தான் மற்ற ஆசிரியர்களுக்கு அவபெயர் ஏற்படுகிறது. இதனால் அவரை பணி இடைநீக்கம் செய்துள்ளதாக கல்வித்துறை அதிகாரி ெதரிவித்தார். மேலும் இதுகுறித்து போலீசார் அந்த பள்ளியில் பயிலும் மற்ற மாணவிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளியின் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்