வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: பா.ஜனதா எம்.பி.யை கைது செய்யக்கோரி சி.ஐ.டி.யு. போராட்டம்

வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: பா.ஜனதா எம்.பி.யை கைது செய்யக்கோரி சி.ஐ.டி.யு. போராட்டம் நடத்தினர்.

Update: 2023-05-29 18:45 GMT

குடகு-

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது சில வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி ஜந்தர்மந்தரில் மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது 'போக்சோ' சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதிலும் அவரை போலீசார் இதுவரையில் கைது செய்யவில்லை. இதனால் அவரை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், பிரிஜ்பூஷன் சரண்சிங்கை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புராவில் சி.ஐ.டி.யு. தலைமையில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், போலீசாருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு இதுபோல் கொடுமைகள் நடக்கக்கூடாது எனவும், உடனடியாக பிரிஜ்பூஷன் சரண்சிங்கை கைது செய்ய வேண்டியும் கோரி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்