தொடர் விடுமுறை எதிரொலி; திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

Update: 2023-04-07 18:06 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஏழுமலையான தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை தினங்களில் திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து காணப்படும்.

அதன்படி தற்போது தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தருகின்றனர். இலவச டோக்கன்கள் கிடைக்காததால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்கின்றனர். மேலும் கூட்டம் அலைமோதுவதால் 3 நாட்களுக்கு சிபாரிசு கடிதங்கள் மூலம் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்