செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் நடந்து கொண்ட விதம் தவறு - சஞ்சய் ராவத் கருத்து

செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் தவறு என்று சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-30 05:15 GMT

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை குறித்து உத்தவ் தாக்கரே அணித் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில்

"இது தவறு. அரசில் இருந்து ஒருவரை நீக்குவது முதல்-அமைச்சரின் உரிமை. மகாராஷ்டிராவிலும், நவாப் மாலிக் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன, ஆனால் அவரது ராஜினாமாவை அரசாங்கம் எடுக்கவில்லை. ஆனால், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம், பகத்சிங் கோஷ்யாரியை விட ஒரு படி மேலே இருப்பது போல் தெரிகிறது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அரசியல் சட்டத்தை மீறுகிறது" என்று கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்