மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி மாரடைப்பால் மரணம்
மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து வந்தவர் ஆர்.திலீப் (வயது 54). இவர், சி.ஐ.டி. போலீஸ் பிரிவின் நிதித்துறையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, பன்னரகட்டா ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.திலீப் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று ஆர்.திலிப் மரணம் அடைந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்திருப்பதாக டாக்டர்கள்தெரிவித்துள்ளனர். கடந்த 2005-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.திலீப் போலீஸ் துறையில் பணிக்கு சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.