உத்தரபிரதேசம்: பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 2 போ் காயம்

உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போ் காயமடைந்துள்ளனா்.

Update: 2022-05-27 19:34 GMT

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் உள்ள தில்லி-யமுனோத்ரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பள்ளியில் மர்ம நபர்கள் சிலா் துப்பாக்கியுடன் நுழைந்தனா். தீடீரென அவா்கள் அங்கிருந்தவா்கள் மீது துப்பாக்கியால் சுட்டனா்.

இந்த சம்பவத்தில் பள்ளியின் முதல்வா் அமித் சவுகான் உள்ளிட்ட 2 போ் காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திாியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.

இந்த சம்பவம் தொடா்பாக 2 சிறுவா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து துப்பாக்கியையும் கைப்பற்றினர். மேலும், போலீசாா் அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

மேலும் செய்திகள்