சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து துரதிருஷ்டவசமானது - ஓய்வு பெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை

ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Update: 2022-07-05 13:52 GMT

நுபுர் சர்மா (கோப்புப் படம் - பிடிஐ)

புதுடெல்லி,

முகமது நபி குறித்து நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்து, நாட்டையே தீக்கிரையாக்கி விட்டதாகவும், இதற்காக நுபுர் ஷர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் பர்திவாலா ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

இந்த கருத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், நுபுர் ஷர்மா வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் துரதிஷ்டவசமானது என விமர்சித்துள்ளர்.

நுபுர் ஷர்மா தொடர்ந்த வழக்கிற்கும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களுக்கும் துளியும் தொடர்பில்லை என தெரிவித்துள்ள அவர்கள், இதுபோன்ற கருத்துகள், நீதித்துறை கண்ணியத்திற்கும் எதிரானது என்றும், நீதித்துறையின் எல்லையை மீறிய செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்