வேலை தருவதாக கூறி காரில் அழைத்து சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை

வேலை தருவதாக கூறி காரில் அழைத்து சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழில் அதிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-05-14 18:45 GMT

மங்களூரு-

வேலை தருவதாக கூறி காரில் அழைத்து சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழில் அதிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொழில் அதிபர்

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா உஜிரே பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் ஹெக்டே. தொழில்அதிபர். இவருக்கு சொந்தமாக அந்தப்பகுதியில் ஜவுளிக்கடை மற்றும் பல்பொருள் அங்காடி ஆகியவை உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது ஜவுளிக்கடைக்கு திருமணமான 20 வயது இளம்பெண் ஒருவர் வந்தார்.

இவர், பிரபாகர் ஹெக்டேவை சந்தித்து தனக்கு வேலை தரும்படி கூறி உள்ளார். அப்போது, பல்பொருள் அங்காடியில் வேலை இருப்பதாகவும், அங்கு வேலை கொடுப்பதாகவும் பிரபாகர் ஹெக்டே, அந்த பெண்ணிடம் கூறி உள்ளார்.

பாலியல் தொல்லை

மேலும் அவர் அந்த பெண்ணை பல்பொருள் அங்காடிக்கு வரும்படி தன்னுடன் காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது, காரில் செல்லும் போது பிரபாகர் ஹெக்டே அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்டு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு வாலிபர், காரை தடுத்து நிறுத்தினார்.

இதையடுத்து பிரபாகர் ஹெக்டே, அந்த பெண்ணை காரில் இருந்து இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

வலைவீச்சு

இதையடுத்து அந்த பெண், உஜ்ரே போலீஸ் நிலையத்துக்கு சென்று பிரபாகர் ஹெக்டே மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலை மறைவான பிரபாகர் ஹெக்டேவை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்