நாம் அனைவரும் இந்துக்கள்தான்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
நாம் அனைவரும் இந்துக்கள் தான் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.
ஷில்லாங்,
நாம் அனைவரும் இந்துக்கள் தான் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். இது தொடர்பாக ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:
நமது சமூகத்தை ஒழுங்கமைப்பதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம் ஆகும். அதன் மூலமே இந்தியா முழு வளர்ச்சி அடையும். சுயநலத்தை தியாகம் செய்து விட்டு நாட்டுக்காக தியாகம் செய்வதற்கே ஆர்.எஸ்.எஸ் கற்றுக்கொடுக்கிறது. இந்து மற்றும் இந்தியா என்பது ஒரே மாதிரியான புவியியல் கலாசார அடையாளம் ஆகும். எனவே நாம் அனைவரும் இந்துக்கள்தான்" என்றார்.