ஆந்திராவில் ராம நவமி கொண்டாட்டத்தில் கோவிலில் திடீர் தீ விபத்து

ஆந்திராவில் ராம நவமி கொண்டாட்டத்தில் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-03-30 09:55 GMT

விசாகபட்டினம்,

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் தனகு மண்டல் துவா பகுதியில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம் காரணமாக பல்வேறு பூஜை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கோடைக் காலம் என்பதால் பக்தர்களின் வருகைக்காக பனை ஓலை கொண்டு நிழற்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென பந்தல் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முயன்ற நிலையில் தீயானது கோவில் முழுவதும் பரவியது.

இதனால் கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினை சேர்ந்த ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்