முருக மடத்தின் நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்
முருக மடத்தின் நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு: சித்ரதுர்கா மாவட்டத்தில் முருக மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு இருந்து வருகிறார். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மடாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், முருகா மடத்தின் நிர்வாக அதிகாரியாக, கர்நாடக ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதியான வஸ்துரமடா நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர், இதற்கு முன்பு சித்ரதுர்கா மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாகவும் பணியாற்றி இருந்தார்.
மடாதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறுவதற்கு பின்னணியில் தற்போது இருக்கும் நிர்வாக அதிகாரி பசவராஜிம் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் நிர்வாக அதிகாரியாக தொடர கூடாது என்பதால், புதிய நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.