தன்னை தானே வாடைக்கு விடும் வாலிபர்: இதுவரை 50 பெண்களுக்கு மேல் டேட்டிங் செய்திருப்பதாக தகவல்
இளைஞர் ஒருவர் தன்னைத் தானே வாடகைக்கு விட்டுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
கவுகாத்தி,
அரியானா மாநிலம் குருக்ராம் நகரத்தை சேர்ந்தவர் ஷகுல் குப்தா(31). இவர் தன்னை தானே வாடகைக்கு விடுகிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நீங்கள் தனிமையாக உணர்ந்தாலோ அல்லது ஒரு நண்பர் தேவைப்பட்டாலோ, என்னை வாடைக்கு எடுப்பதில் கூச்சம், வெட்கம் கொள்ளவேண்டாம். நான் உங்களின் சிறந்த டேட்டாளனாக இருப்பேன்.
காதல் ஜோடிகள் தங்களுக்குள் ஐ லவ் யூ சொல்லிக்கொள்வதை கேட்கும்போது எரிச்சலாக இருக்கும். என் இயலாமையை குறிப்பது போல, நான் வேண்டாதவனாக அது உணரச்செய்யும். இதனால் தோன்றிய தனிமை தான் இந்த வாடகை காதலானாக இருக்க என்னை தூண்டியது.
தான் உடன் செல்லும் பெண்களுடன் நீண்ட நேரம் கதை கேட்பது தனக்கு மிகவும் பிடித்த விஷயம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவர் இதுவரை 50 பெண்களுக்கு மேல் டேட் செய்திருக்கிறார். வேலண்ட்டைன்ஸ் டே அன்றைக்கு மட்டும் இவர் தன்னை வாடகைக்கு விடுவதில்லை.
மற்ற நாட்களிலும் தேவைகள் இருந்தால் வாடகை பாய்பிரண்டாகவோ, தோழனாகவோ இருக்கிறாராம். கடந்த 2018 முதல் இந்த சேவையை அவர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விளம்பரத்தில் தனது நோக்கங்கள் வணிக ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ இல்லை என்று அவர் கூறியுள்ளார்.