ஏர் இந்தியா ஊழியர்கள் வழுக்கைத் தலையை மறைக்க மொட்டையடித்துக் கொண்டு பணிக்கு வர அறிவுறுத்தல்..!

ஏர்-இந்தியா நிறுவனத்தை வாங்கியுள்ள டாடா குழுமம், நிறுவனத்தில் பணியாற்றும் ஆண்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது.

Update: 2022-11-24 15:05 GMT

புதுடெல்லி,

ஏர்-இந்தியா விமான நிறுவனத்தை வாங்கியுள்ள டாடா குழும நிர்வாகம், அதன் விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஆண்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது.

தற்போது வழுக்கைத் தலை என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டதோடு, பேஷனாகியும் விட்டது. ஆம், இன்றைய ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகம் கொட்டி, அதனால் விரைவிலேயே வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது.

டாடா குழுமம் விலைக்கு வாங்குவதற்கு முன்பு, ஏர் இந்தியா விமான நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக இருந்தது.இந்த நிலையில், வழுக்கைத் தலையை மறைக்க தலையில் முடியில்லாமல் மொட்டையடித்துக் கொண்டு பணிக்கு வர வேண்டும் என்று ஆண் பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஏர்-இந்தியா பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏர்-இந்தியா பணியாளர்கள் தங்களை காட்டிக்கொள்ளும் விதம் சர்வதேச தரத்தில் இல்லை. ஆகவே தலையில் சிறிய அளவில் வழுக்கை விழுந்தவர்கள் கூட, தினமும் மொட்டையடித்துக் கொண்டு பணிக்கு வர வேண்டும் என்று ஆண் பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வர உள்ளதாக ஏர்-இந்தியாவை வாங்கியுள்ள டாடா குழும நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்