ஆசிரமத்தில் சிறுமி கற்பழிப்பு: ஆந்திர சாமியார் சுவாமி பூர்ணானந்தா கைது

போக்சோ மற்றம் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ், பூர்ணானந்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-06-20 20:20 GMT

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சுவாமி ஞானானந்தா ஆசிரமம் நடத்தி வருபவர் சுவாமி பூர்ணானந்தா. அந்த ஆசிரமத்தில், அனாதை இல்லமும், முதியோர் இல்லமும் இயங்கி வருகின்றன.

அனாதை இல்லத்தில் 4 சிறுமிகள் உள்பட 12 பேர் தங்கி இருக்கின்றனர். அவர்களில், 15 வயதான ஒரு சிறுமி, விஜயவாடாவில் சாமியார் மீது போலீசில் புகார் கொடுத்தார்.

தன்னை சுவாமி பூர்ணானந்தா சித்ரவதை செய்ததாகவும், திரும்ப திரும்ப பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில், போக்சோ மற்றம் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ், பூர்ணானந்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை நேற்று கைது செய்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்