ஸ்கூட்டர் ஓட்டக்கூடாது என்று கண்டித்த கணவர்... கைக்குழந்தையுடன் ரெயில் முன் பாய்ந்த இளம்பெண்

இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.;

Update:2024-07-24 03:13 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் மதார் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரியங்கா சவுராசியா (வயது 24) என்ற இளம்பெண் அவரது 4 மாத மகன் ஹரியான்ஷ் உடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும், பிரியங்காவை ஸ்கூட்டர் ஓட்ட விடாமல் அவரது கணவர் மற்றும் தாயார் தடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அவர் தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்