'இன்று முழு உலகமும் பிரதமர் மோடியின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறது' - அமித்ஷா

இன்று முழு உலகமும் பிரதமர் மோடியின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.;

Update:2025-01-16 21:59 IST

காந்திநகர்,

குஜராத் மாநிலம் வாத்நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அருங்காட்சியகத்தை மத்திய் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"இந்த நிகழ்வு பிரதமர் மோடி பிறந்த இடத்தில் நடைபெறுகிறது. வாத்நகரில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, இன்று சர்வதேச தலைவராக பிரதமர் மோடி உயர்ந்துள்ளார். தனது குழந்தைப் பருவத்தில் அவர் அனுபவித்த ஏழ்மையை நாட்டின் எந்த குழந்தையும் அனுபவிக்காத வகையில் பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். இன்று முழு உலகமும் பிரதமர் மோடியின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறது."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்