கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்.. சபாநாயகரின் முடிவை உறுதி செய்தது ஐகோர்ட்டு

சபாநாயகரின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.;

Update:2025-01-16 21:22 IST

பனாஜி:

கோவா மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனையடுத்து அந்த எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி, சபாநாயகர் ரமேஷ் தவாட்கரிடம் காங்கிரஸ் மனு அளித்தது. தகுதி நீக்க மனுவை கோவா பிரதேச காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கிரிஷ் சோடங்கர் தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சபாநாயகர் தள்ளுபடி செய்தார்.

சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து கடந்த 6-ம் தேதி மும்பை ஐகோர்ட்டின் கோவா அமர்வில் வழக்கு தொடர்ந்தார் சோடங்கர். இந்தத வழக்கை நீதிபதிகள் மகரந்த் கார்னிக், நிவேதிதா மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, கட்சி தாவிய 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யாத சபாநாயரின் உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்தனர். அத்துடன் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் இணைந்ததால், 40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 28 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்