ராஜஸ்தான் மாநிலங்களவை இடைத்தேர்தல்; மத்திய இணை மந்திரி ரவ்நீத் சிங் போட்டியின்றி தேர்வு

ராஜஸ்தான் மாநிலங்களவை இடைத்தேர்தலில் மத்திய இணை மந்திரி ரவ்நீத் சிங் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-08-27 13:30 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 10 மாநிலங்களவை இடங்கள் உள்ளன. இதில் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. கே.சி.வேணுகோபால், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து அந்த இடத்திற்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை. சுயேட்சை வேட்பாளர் பபிதா வத்வானியின் வேட்பு மனுவானது பரிசீலனையின்போது நிராகரிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய இணை மந்திரியுமான ரவ்நீத் சிங் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் ராஜஸ்தானில் இருந்து தற்போது பா.ஜ.க.விற்கு 5 மாநிலங்களவை எம்.பி.க்களும், காங்கிரஸ் கட்சியில் இருந்து 5 மாநிலங்களவை எம்.பி.க்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்