38 வயது நபருக்கு திருமணம் செய்ய 7 வயது சிறுமி விற்பனை - ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்
7 வயது சிறுமியை ரூ.4.50 லட்சத்துக்கு வாங்கி திருமணம் செய்துள்ள விவகாரம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மனியா பகுதியை சேர்ந்தவர் பூபால் சிங் (வயது 38). இவர் கடந்த 21-ந்தேதி 7 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியது.
அதாவது அந்த சிறுமியை திருமணம் செய்வதற்காக அவரது தந்தைக்கு ரூ.4.50 லட்சம் கொடுத்து சிறுமியை விலைக்கு வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார், சிறுமியை அதிரடியாக மீட்டதுடன், இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 வயது சிறுமியை ரூ.4.50 லட்சத்துக்கு வாங்கி திருமணம் செய்துள்ள விவகாரம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.