பா.ஜனதாவை விமர்சிக்கவே ராகுல் காந்தி பாதயாத்திரை மேலிட பொறுப்பாளர் அருண்சிங் குற்றச்சாட்டு

பா.ஜனதாவை விமர்சிக்கவே ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்தப்படுவதாக மேலிட பொறுப்பாளர் அருண் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-10-06 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ் ஊழல், சதிகார கட்சி. எங்கள் கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. அரசு மீது குறை கூறி வருகிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் முதல் முறையாக குறை கூறவில்லை. அவர் அடிக்கடி தனது கருத்துகளை கூறுகிறார். அவரை கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்து கொள்வது இல்லை. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் ராகுல் காந்தி இங்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தேர்தலை மனதில் வைத்து எங்கள் அரசு மீது அவர் குறை கூறுகிறார்.

பா.ஜனதா அரசை விமர்சிக்கவே அவர் பாதயாத்திரை நடத்துகிறார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். கர்நாடக பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை காங்கிரசார் கூறுகிறார்கள். அதற்கு ஏதாவது ஆதாரங்களை அவர்களால் வழங்க முடியுமா?. அவ்வாறு ஆவணங்கள் இருந்தால் லோக்அயுக்தாவில் வழங்கலாம். அந்த அமைப்பு இருக்கும்போது, நீதி விசாரணை கேட்பது சரியல்ல.

இவ்வாறு அருண்சிங் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்