ராகுல் காந்தியின் கருத்துக்கு மதிப்பு இல்லை- மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேச்சு

ராகுல் காந்தியின் கருத்துக்கு மதிப்பு இல்லை என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-19 16:46 GMT

பெங்களூரு: மத்திய நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி உப்பள்ளியில் நடைபெற்ற பா.ஜனதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் என்ன சாதனை செய்தது. ராகுல் காந்தி ஒரு அறியாமை மிகுந்த தலைவர். அவரது பேச்சுக்கு எந்த மதிப்பும் கிடையாது. ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் காங்கிரசார் குற்றம்சாட்டினர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு, அது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தது. ரபேல் போர் விமானங்களால் நாட்டின் விமானப்படை பலமடைந்து உள்ளது.கரீப் கல்யாண் திட்டம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் வரை பிரதமர் மோடி நேர்மையான முறையில் பணியாற்றி வருகிறார். இந்தியாவை உலக குருவாக மாற்ற மோடி பகல்-இரவு பாராமல் பணியாற்றி வருகிறார். அவரது சாதனைகள் அனைத்து வீடுகளுக்கும் போய் சேர வேண்டும். இதை பா.ஜனதாவினர் செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரகலாத்ஜோஷி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்