2 நாள் பயணமாக வயநாடு செல்கிறார் ராகுல்காந்தி..!
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 2 நாள் பயணமாக வயநாடு செல்கிறார்.
புதுடெல்லி,
மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது, ராகுல் காந்தியின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவிக்கான தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ள நிலையில் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக கேரள மாநிலம் வயநாடு செல்ல உள்ளார். வரும் 12, 13 ஆகிய தேதிகளில் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்று பேச உள்ளார்.