கொல்கத்தாவில் மர்ம பொருள் வெடித்து விபத்து - அதிர்ச்சி சம்பவம்
கொல்கத்தாவில் மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவின் எஸ்.என். பானர்ஜி ரோடு - பஞ்சன் தெரு சந்திப்பில் இன்று மர்ம பொருள் வெடித்தது.
மதியம் 1.45 மணியளவில் நடத்த இச்சம்பவத்தில் பழைய இரும்பு, பிளாஸ்டிக், குப்பை பொருட்களை சேகரிக்கும் பபி தாஸ் (வயது 58) நபர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதேவேளை, இச்சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து சீல் வைத்தனர். மேலும், வெடித்தது ஏதேனும் வெடிகுண்டா? அல்லது வேறு ஏதேனும் பொருளா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.