பஞ்சாப்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 7 பேர் படுகாயம்

தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.;

Update:2024-09-03 06:59 IST

கோப்புப்படம் 

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள கிராமத்தில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்.

வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் அந்த வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்