வீடியோ வெளியிட்டு கிரிக்கெட் வீரர் தற்கொலை
வீடியோ வெளியிட்டு கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் முண்டரகி டவுனை சேர்ந்தவர் விஸ்வநாத் தர்மராஜ் ஞானச்சாரி (வயது 25). கிரிக்கெட் வீரரான இவர் உள்ளூர் கிரிக்கெட் அணியில் விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில் அந்த உள்ளூர் கிரிக்கெட் அணி சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விஸ்வநாத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்கள் புறக்கணித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் மன வேதனை அடைந்த விஸ்வநாத் நேற்று முன்தினம் மாலை முண்டரகி அருகே உள்ள கொரலஹள்ளி கிராமத்தில் ஓடும் துங்கபத்ரா ஆற்று பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக விஸ்வநாத், கிரிக்கெட் விவகாரம் குறித்து செல்போனில் செல்பி வீடியோவில் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.