கர்நாடகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது

கர்நாடகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அவர்களுக்கு பொதுவான கேள்வித்தாள் வழங்கப்பட்டது.;

Update:2023-03-28 00:15 IST

பெங்களூரு:

கர்நாடகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அவர்களுக்கு பொதுவான கேள்வித்தாள் வழங்கப்பட்டது.

பொதுத்தேர்வு

கர்நாடகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மாநில பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டின் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அனுமதி அளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தனியார் பள்ளி சங்கத்தினர் மேல்முறையீடு செய்தனர். இந்த பொதுத்தேர்வுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி நேற்று பொதுத்தேர்வு தொடங்கியது. அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

பொதுவான கேள்வித்தாள்

கேள்வித்தாள் பொதுவாக தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுத்தேர்வுக்கு குழந்தைகளின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், இத்தகைய பொதுத்தேர்வு குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்