இந்தியாவின் விரைவான முன்னேற்றத்திற்கு... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு நபரின் முயற்சியும் அடித்தளம் ஆக இருக்கும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.;

Update:2022-07-10 12:28 IST

சூரத்,



குஜராத்தின் சூரத் நகரில் இயற்கை விவசாயம் சார்ந்த கூட்டத்தில் காணொலி காட்சி வழியே பிரதமர் மோடி இன்று பொதுமக்களிடையே உரையாற்றி வருகிறார். அவர் பேசும்போது, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன இந்த தருணத்தில், பல்வேறு இலக்குகளை நோக்கி நாடு பணியை தொடங்கி உள்ளது.

வரவிருக்கிற நாட்களில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான அடித்தளம் ஆக அது இருக்கும் என அவர் கூறியுள்ளார். நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரின் முயற்சிக்கான உணர்வு அடித்தளம் ஆக இருக்கும். அதுவே நமது வளர்ச்சிக்கான பயணத்தின் வழிகாட்டியாக இருந்து வருகிறது.

கிராமங்கள் மற்றும் ஏழை மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கான பெரும் பொறுப்பு நாட்டு மக்களுக்கும் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கும் வழங்கப்பட்டு உள்ளது.

உங்களுடைய முயற்சி மற்றும் உங்களது அனுபவம் ஆகியவற்றால், வருகிற நாட்களில் நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் நிறைய விசயங்களை கற்று, புரிந்து கொள்வார்கள். சூரத்தில் இருந்து வெளிப்பட இருக்கும் இயற்கை விவசாய மாதிரியானது, ஒட்டு மொத்த இந்தியாவுக்கான மாதிரியாக மாறும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்