ஹாசனுக்கு பிரதமர் மோடி வருகிறார்

வருகிற 30-ந் தேதி ஹாசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்து பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.;

Update:2023-04-26 03:25 IST

ஹாசன்:-

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடந்தது. நேற்று முன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து அனல் பறக்கும் பிரசாரம் தொடங்கி உள்ளது. இதில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி, பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட ஏராளமான தலைவர்கள் கர்நாடகம் வர இருக்கிறார்கள்.

அதன்படி ஹாசன் மாவட்டத்திற்கு இன்று(புதன்கிழமை) ஜே.பி.நட்டா வருகிறார். அவர் பா.ஜனதா வேட்பாளர் பிரீதம் கவுடாவை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். அதுபோல் வருகிற 30-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஹாசனுக்கு வந்து பேளூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சுரேஷ் மற்றும் பிற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

பிரதமர் மோடி

மேலும் பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோவும் நடத்துகிறார். நேற்று ஆலூர், சக்லேஷ்புராவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். ஹாசன் மாவட்டத்தில் இந்த முறை 3 முதல் 4 தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்