தெலுங்கானா மாநில தினம் - ஜனாதிபதி, பிரதமா் வாழ்த்து

தெலுங்கானா மாநில தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தொிவித்தனா்.

Update: 2022-06-02 06:18 GMT

புதுடெல்லி,

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஜீன் மாதம் 2-ந் தேதி தெலுங்கானா பிாிக்கப்பட்டது. தனி மாநிலமாக உருவாக்கப்பட்டு இன்று 8-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி, தெலுங்கானா மக்களுக்கு பிரதமா் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோா் வாழ்த்து தொிவித்து உள்ளனா்.

இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட டுவிட்டா் பதிவில், தெலுங்கானா மாநிலம் உருவான தினத்தில் எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். தெலுங்கானா மக்கள் கடின உழைப்பு மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கான இணையற்ற அர்ப்பணிப்புக்கு ஒத்ததாக உள்ளனர்.தெலுங்கானா மாநிலத்தின் கலாச்சாரம் உலகப் புகழ்பெற்றது. தெலுங்கானா மக்களின் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன். என அவா் பதிவிட்டுள்ளாா்.

வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்ட மாநிலம் பாராட்டதக்க வளா்ச்சி அடைந்து உள்ளது. நாட்டின் தொழில் மையமாகவும் உருவெடுத்துள்ளது. அது தொடர்ந்து செழித்து, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற விரும்புகிறேன் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தொிவித்துள்ளாா்.

Tags:    

மேலும் செய்திகள்